India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா 100% வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பேருந்து பயணிகளை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று முதல் மார்ச்.30 வரை மூடப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் இருந்து
அரசு மருத்துவமனை, அவலூர்பேட்டை, சேத்பட், வந்தவாசி செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகவும் அல்லது திண்டிவனம் சாலை வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷ், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் அதிகமாக உள்ளதாக இன்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பெல், OFT, HAPP, உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை என்றும், நாம் தமிழருக்கு ஆதரவளித்தால் பெரும் போராட்டம் நடத்தி இதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதில் ஒரு உத்தி தான் வாக்காளர்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்க ஒரே பெயரில் பலரை களம் இறக்குவது. அதன்படி கோவை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை குறி வைக்கும் விதமாக, 5 பேர் ராஜ்குமார் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்து களமிறங்கி உள்ளனர். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே இது சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மார்ச் 29) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர வி.எம்.சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன். இவர் நேற்று(மார்ச் 28) புறவழிச் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகையில் சீசனை முன்னிட்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் 137 ஆவது ஆண்டு குதிரை பந்தயம் ஏப்ரல் 6 தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6 , 7 ,13 , 14 , 20 ,21 , 27 ,28 , மே 4 , 5 ,11 , 12 , 18 , 19 ,25 ,26 ,ஜூன் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடைபெறும். இதில் சென்னை , பெங்களூரூ , மும்பை உள்பட பல இடங்களில் இருந்து 500 குதிரைகள், 35 ஜாக்கிகள்,
24 குதிரை பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.