Tamilnadu

News March 17, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.

News March 17, 2024

திருச்சியில் அதிரடி சோதனை

image

திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற அறிவுறுத்தினர்.

News March 17, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 15 இலட்சம் வாக்காளா்கள்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,55,717 பேர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2,30,470 பேர், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,773 பேர், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,966 பேர், தாராபுரம் தொகுதியில் 2,58,819 பேர், காங்கயம் தொகுதியில் 2,59,681 பேர் என மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா்.

News March 17, 2024

நாட்டுதுப்பாக்கி மற்றும் கரி மருந்து பறிமுதல்  

image

வேலூர், பேரணாம்பட்டு மொரசப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பிச்சாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பிச்சாண்டியை பேரணாம்பட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 17, 2024

உடுமலை :30 ஆயிரம் மதிப்பிலான பொன்னாடைகள் பறிமுதல்

image

திருப்பூர், உடுமலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தணிக்கை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலை வழியாக வந்து கொண்டிருந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள்
இல்லாமல் கொண்டு வந்த
30 ஆயிரம் மதிப்புள்ள 158 பொன்னாடைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொன்னாடைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலையில் வைக்கப்பட்டன.

News March 17, 2024

கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரை கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர்களை கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 17, 2024

சிவகங்கை: வீர விதை சிலம்பம் மாணவருக்கு விருது 

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவாவிற்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலை இளம் மணி வளர்மணி சுடர்மணி நன்மணி முதுமணி விருதுகள் வழங்கப்பட்டன. வீரம் விதை சிலம்பாட்ட குழுவின் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

News March 17, 2024

கள்ளக்குறிச்சியில் செயற்குழு கூட்டம்

image

தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 15 ஆவது செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள வெற்றி திருமண மஹாலில் நடைபெற்றது. முதல் மாநிலத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில  செயற்குழு உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News March 17, 2024

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது புகாரளிக்க தொலைபேசி எண்கள்

image

தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் சி – விஜில் மற்றும் சுவிதா ஆகிய மொபைல் ஆப்கள் மூலம் போட்டோ, வீடியோவுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் 1800-425-5799, 0452 2535374, 0452 2535375, 0452 2535376, 0452 2535377, மற்றும் 0452 2535378 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

News March 17, 2024

தேர்தல்: தவறான தகவல் பரப்பினால் இதை செய்யுங்கள்!

image

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க மதுரை மாவட்ட காவல்துறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண்ணை (9498101395) தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!