Tamilnadu

News August 26, 2025

BREAKING: மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

image

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் இன்று (ஆக.26) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்ற குழு தலைவர் ஆர்.ஜெயராமன், தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

News August 26, 2025

சேலத்தில் மட்டும் 80,277 மனுக்கள் கலைஞர் உரிமைத்தொகை!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி வரை உங்களைத் தேடி அரசு எனும் திட்டத்தின் கீழ் புதிதாக அறிவிக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 150 நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மட்டும் தமிழக அரசின் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 80,277 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

25 நாட்கள் 150 முகாம்கள் 1,50,640 மனுக்கள்!

image

சேலத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெற்ற 150 முகாம்களில் அறிவிக்கப்பட்ட துறைகளின் வாயிலாக 45,409 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் 24 ஆயிரத்து 954 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 70 ஆயிரத்து 363 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல்வேறு உதவித்தொகைகள் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 640 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

News August 26, 2025

காஞ்சிபுரம்: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc, BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 26, 2025

தூத்துக்குடியில் சினிமா பாணியில் திருட்டு

image

தூத்துக்குடி டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சேலத்தில் வைத்து விட்டலை கைது செய்தனர்.

News August 26, 2025

தேசிய ஆசிரியர் விருதுக்கு தஞ்சை பேராசிரியர் தேர்வு

image

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம், ஒன்றிய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு உயர் கல்வி பொறியியல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு அறிவித்துள்ள 21 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் ஆவார். இவருக்கு (செப் 5) தேதி தில்லியில் வெள்ளிப் பதக்கமும், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

News August 26, 2025

அரியலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

News August 26, 2025

513 ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் ரூ.13 கோடி

image

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 510 பல்நோக்கு ஊழியர்கள் (எம்டிஎஸ்), 3 பணி ஆய்வாளர்களுக்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அதிக ஊதியம் பெறுவதை மேற்கோள் காட்டி, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையினை வேண்டி கோரிக்கைகள் வைத்ததையடுத்து, ஊதிய உயர்வு நிலுவைத்தொகை ரூ.13 கோடி வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

News August 26, 2025

மயிலாடுதுறை: லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!