Tamilnadu

News August 16, 2025

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

image

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச்சில் இன்று (ஆக. 16) காலை குளித்த பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான ஒரு பெண் உட்பட இரண்டு வாலிபர்கள் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 16, 2025

மேலூர் தொகுதி நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் கோட்டைக்குமார் என்ற ராமகுமார் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், எல்.எல்.பி முடித்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2025

புளியம்பட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

image

புஞ்சைப் புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி, சுப்பிரமணியர் கோவிலில், கால பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 16, 2025

திருத்தணியில் அணைக்கட்டு எம்.ஏல்.ஏ சாமி தரிசனம்

image

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் மற்றும் வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்றத் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் இன்று சாமி தரிசனம் செய்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள், ஆலய நிர்வாகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

News August 16, 2025

பேச்சுப் போட்டி அறிவிப்பு – ஆட்சியர் தகவல்

image

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே, வரும் 21.8.2025 மற்றும் 22.8.2025 மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ஆளுநர் உடலுக்கு மரியாதை செலுத்திய சீமான்

image

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த இல.கணேசன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தற்பொழுது சென்னை டி நகர் இல்லத்தில் வைத்துள்ள அவருடைய உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

News August 16, 2025

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

திருச்சி: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை தினத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!