Tamilnadu

News August 26, 2025

கரூர்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 26, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

சேலம்: காலை உணவு திட்டத்தில் 11,488 பேர் பயன்பெறுவர்!

image

காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 26, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டில் வரும் ஆக.30ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் 8th, பட்டப்படிப்பு மற்றும் BE, ITI, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27426020, 9384499848 எண்களில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

கோவை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9952507068-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 26, 2025

விழுப்புரம் ஆட்சியர் பெண்களுக்கு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற தகுதியுள்ள பெண்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

விழுப்புரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025

image

விழுப்புரம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 – கால்பந்து போட்டியை இன்று ஆக.26 விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடக்கி வைத்தனர். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிலவரம்

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ₹8,500க்கும், மக்காச்சோளம் ₹2,369க்கும், மணிலா ₹7,930க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.

News August 26, 2025

திருச்சி: பறவைகள் பூங்கா நாளை செயல்படும்

image

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

JUST IN: திருவள்ளூர்-பள்ளி மாணவிகளுக்கு மூச்சு திணறல்

image

திருவள்ளுர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு தீடிரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த புகையின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!