Tamilnadu

News March 18, 2024

வானூர்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News March 18, 2024

கிருஷ்ணகிரி அருகே வார் ரூம் திறப்பு விழா

image

2024 கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில்(WAR ROOM) கட்டளை மையம் திறப்புவிழா நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., மாநில சட்டத்துறை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞரணி அணி கலந்து கொண்டனர்.

News March 18, 2024

சேலம்: ஆர்வத்தோடு தேர்வெழுதிய முதியவர்கள்!

image

’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.

News March 18, 2024

கோவையில் போக்குவரத்து மாற்றம்

image

கோவையில் இன்று பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று கூறினார். மேலும் அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.

News March 18, 2024

விருதுநகர் அருகே பாலியல் தொழில்; இருவர் கைது 

image

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் நேற்று குடியிருப்பில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 35, மற்றும் ராஜேந்திரன் 28 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 18, 2024

தேனி: தொழிலில் நஷ்டம்; ஒருவர் தற்கொலை!

image

கம்பத்தைச் சேர்ந்தவர் நாராயணன் இவர் மைக் செட் கடை வைத்து தொழில் செய்து வந்தார். அந்த தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மைக் செட் தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார். இந்நிலையில் இவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

ஈரோடு : 108 ஆம்புலன்சில் “குவா குவா”

image

அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமம் – தம்முரெட்டியை சேர்ந்த தம்பதி முருகேஷ் – சிந்து (22). நிறைமாத கர்ப்பிணியான சிந்துவிற்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது. பின் 108 வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் சிந்துவிற்கு பிரசவம் பார்த்தார். இதில்
சிந்துவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

News March 18, 2024

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்கு தொலைபேசி மூலம் வரும் புகார்கள், கண்காணிப்புக்குழு, கணினியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொ.பேசி. எண்.18004259769 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்

News March 18, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மாலை விடுத்துள்ள அறிவிப்பில், தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்பினால் 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை கைபேசி எண் 9498101765 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News March 18, 2024

சேலம்: மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து

image

மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பெட்டியில் மனுக்களாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!