India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ, நடத்துனர் மரியாதை குறைவாக நடத்தினாலோ, உங்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் காரணமாக, நாளை (27.08.2025) முதல் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது. தற்போது இயங்கும் பேருந்துகள் மந்தைவெளி MRTS, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், லஸ் கர்னர் அருகே நிறுத்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் பட்டினப்பாக்கம் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகவலை ஷேர் பண்ணுங்க.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆக.27,28) கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரத்தில் இருந்து இயக்கப்படும் 21, 21 பி பேருந்துகள் கெம்பனூர் நிறுத்தத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகருக்கு சாதிய பாகுபாடு பார்த்து இயக்கப்படாமல் 400 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் கோவை கலெக்டருக்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவையில் 1,500 ஹெக்டேரில் வெங்காய சாகுபடி நடைபெறுகிறது. புதிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.24,000 மானியத்தில் விதைகள், உரங்கள் வழங்கப்படுகின்றன. நுண்ணீர் பாசனத்திற்கு சிறு விவசாயிகளுக்கு 100%, மற்றவர்களுக்கு 75% மானியம் கிடைக்கும். மேலும் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு வெங்காய பட்டறை அமைக்க ரூ.87,500 மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தி.மலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. அருண் ஜெர்மனியில் வேலை பார்த்து வரும் நிலையில், மகா லட்சுமியிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மாநகராட்சி பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றின் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.