Tamilnadu

News August 26, 2025

நாமக்கல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’

News August 26, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 26, 2025

வேளாங்கண்ணி: காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா

image

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கத் தொடக்க விழா நாளை (26.08.2025) நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

தென்காசியில் நீர்நிலைகள் கணக்கெடுக்கும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைகள் கணக்கெடுப் புணி நடைபெற்று வருகிறது. 2வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணியானது கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், நகர்புறங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

திருவாரூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (25.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

காஞ்சிபுரத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் காலை உணவு நாள்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதலில் மாநகராட்சிகளில் தொடர்ந்து தற்போது அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இதன் விரிவாக்கம் இன்று (26.08.2025) முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 20 பள்ளிகளில், 871 மாணவர்களும் 1499 மாணவிகளும் என மொத்தம் 2370 பேர் பயன் பெறுகின்றனர்.

News August 26, 2025

தூத்துக்குடி காவல்துறை சார்பில் புதிய கைப்பந்து மைதானம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் இதனை காவல் உதவி கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

News August 26, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

இன்று கிருஷ்ணகிரி வரும் பிரேமலதா விஜயகாந்த்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரிக்கு இன்று (26/08/2025) வருகை தர உள்ளார். சேலம் பைபாஸ் அருகே ஆவின் மேம்பாலம் அருகே மாலை 6:00 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். கட்சிப் பணிகள் பல்வேறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.

News August 26, 2025

தென்காசி: ஆக.29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.29 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!