India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருகோகர்ணம் தனியார் மஹால், பொன்னமராவதி சமுதாயக்கூடம், ஆலங்குடி தனியார் மஹால், கறம்பக்குடி தனியார் மஹால், கோட்டைப்பட்டினம் தனியார் மஹால், வடுகபட்டி கலையரங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.26) நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் தற்போது பருவமழையை முன்னிட்டு வளர்ப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. எனவே மீன்குஞ்கள் தேவைப்படும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து மீன்வளர்த்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இம்மையங்கள் மூலம் விதைகள், உரங்கள், பூச்சி-நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விருதுநகர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 11 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணினி, தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை கொலை செய்த வழக்கில், நாகப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்டக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு பரிந்துரை செய்தார். காவல்துறையின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 25) இரவு 11 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை முன்னெடுக்கிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் வ.களத்தூர், லப்பைக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் இருதரப்பினரும், விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பொழுது காவல்துறை மற்றும் அரசு வழிகாட்டு தலின்படி விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.
உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி அறிவியல் மற்றும் கலைகல்லூரியில் (28.08.2025) அன்று மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்படும் இதில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதூர்த்தி விழாவில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட 2000 மனுக்கள் பெறப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1500 மனுக்களுக்கு மட்டுமே பிள்ளையார் சிலையை வைத்து வழிபட சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் (22.08.25 முதல் 24.08.25) 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 955 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.