India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி உள்ளது. இந்த ஏரி 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் ஏரி முழுவதும் தற்போது செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 28.08.2025 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மேல்விசாரம் நகராட்சி சார்பில் அண்ணாசாலை, மேல்விஷாரம், இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகள், மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு விரைவான தீர்வுகள் காண இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மிரில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் காகித உறை பைகள் & காகித கோப்புகள் தயாரித்தல் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உணவு, சிற்றுண்டி உண்டு. தொடர்புக்கு 04342 230511,8667679474 அழைக்கவும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க மொத்தம் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருகோகர்ணம் தனியார் மஹால், பொன்னமராவதி சமுதாயக்கூடம், ஆலங்குடி தனியார் மஹால், கறம்பக்குடி தனியார் மஹால், கோட்டைப்பட்டினம் தனியார் மஹால், வடுகபட்டி கலையரங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.26) நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் தற்போது பருவமழையை முன்னிட்டு வளர்ப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. எனவே மீன்குஞ்கள் தேவைப்படும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து மீன்வளர்த்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இம்மையங்கள் மூலம் விதைகள், உரங்கள், பூச்சி-நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விருதுநகர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 11 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணினி, தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.