India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், சருகணி அருகே பொன்னலிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு, இப்பகுதி இஸ்லாமியா்களால் மானியமாக விடப்பட்ட சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் தனியாா் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட விவரம், கிராம மக்களுக்கு தெரிய வந்தது. எனவே இந்த கோயில் நிலத்தை மீட்டு தர இப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரம்பியல் பாதிப்பு, ஆட்டிசம் போன்றவற்றால் நடக்க இயலாத மாணவர்கள் 61 பேருக்கு காலிப்பர்கள், விபத்தில் கால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
நிதி நிறுவனத்தில் ₹40,000 கடன் வாங்கிய சுமித்ரா, 8 மாத தவணைகள் செலுத்திய பிறகு மீதி தொகையை செலுத்தவில்லை. இதனால் கடன் பெற்றுத் தந்த ரூபினா மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் சுமித்ராவிடம் பணத்தை திரும்ப கேட்டனர். மனமுடைந்த சுமித்ரா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில், நேற்று இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகமும், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அடுத்த 48 மணிநேரத்தில் ஒடிசா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.ஆக.27, 28 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசும்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஆக.29ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இளைஞர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெயிட்டுள்ள அறிக்கையில், ‘வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி முத்திரை இல்லாமல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார். SHARE NOW!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.