Tamilnadu

News August 26, 2025

கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

image

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்

News August 26, 2025

டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

image

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

நீலகிரிக்கு 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.!

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அடுத்த 48 மணிநேரத்தில் ஒடிசா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.ஆக.27, 28 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசும்.

News August 26, 2025

தஞ்சை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஆக.29ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இளைஞர்கள்‌ இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெயிட்டுள்ள அறிக்கையில், ‘வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி முத்திரை இல்லாமல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார். SHARE NOW!

News August 26, 2025

கோவில்பட்டி: பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 26, 2025

ஓட்டேரி ஏரியை தூர்வார கோரிக்கை

image

வேலூர் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி உள்ளது. இந்த ஏரி 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் ஏரி முழுவதும் தற்போது செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News August 26, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 28.08.2025 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மேல்விசாரம் நகராட்சி சார்பில் அண்ணாசாலை, மேல்விஷாரம், இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகள், மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு விரைவான தீர்வுகள் காண இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News August 26, 2025

சிவகாசி அருகே ராணுவ வீரர் மரணம்

image

விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மிரில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

News August 26, 2025

தர்மபுரி இளைஞர்கள் கவனத்திற்கு

image

தர்மபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் காகித உறை பைகள் & காகித கோப்புகள் தயாரித்தல் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உணவு, சிற்றுண்டி உண்டு. தொடர்புக்கு 04342 230511,8667679474 அழைக்கவும்

error: Content is protected !!