Tamilnadu

News August 26, 2025

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திருவண்ணாமலை மாநகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டார அளவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.மூா்த்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் நேற்று மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ராணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

News August 26, 2025

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து

image

கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் சமையலர் அபிராமி நேற்று மதிய உணவு சமைக்கும் போது எரிவாயு கசிவால் தீப்பற்றியது. அருகில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லாத நிலையில், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News August 26, 2025

தர்மபுரி: வீலில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி இந்திரா. இருவரும் நேற்று மாலை ஆரூரில் இருந்து தர்மபுரிக்கு மொபெட்டில் வந்தனர். அப்போது இந்திராவின் சேலை மொபெட் வீலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 26, 2025

செங்கல்பட்டு: கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள்

image

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று 26ம் தேதி 675 பேருந்துகள், 28ம் தேதி 610 பேருந்துகள், 29ம் தேதி 405 பேருந்துகள், 30ம் தேதி 380 பேருந்துகளும், 31ம் தேதி 875 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது. SHARE

News August 26, 2025

அரியலூர்: காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்!

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், வாகன உரிமையாளருக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வாகனத்தை இயக்கிய சிறாருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவும், மேலும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு சிறை தண்டனை கிடைக்க பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News August 26, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.
பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு குமாரசாமிப்பட்டி வேளாண்மை பொறியியல் துறையின் சேலம் செயற்பொறியாளர் அலுவலகத்தையோ (அ) மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி (அ) தங்கள் பகுதியில் அருகில் உள்ள வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

News August 26, 2025

கோயில் நிலத்தை மீட்டு தர கோரி ஆட்சியரிடம் மனு.

image

சிவகங்கை மாவட்டம், சருகணி  அருகே பொன்னலிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு, இப்பகுதி இஸ்லாமியா்களால் மானியமாக விடப்பட்ட சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் தனியாா் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட விவரம், கிராம மக்களுக்கு தெரிய வந்தது. எனவே இந்த கோயில் நிலத்தை மீட்டு தர இப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

News August 26, 2025

ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

image

மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரம்பியல் பாதிப்பு, ஆட்டிசம் போன்றவற்றால் நடக்க இயலாத மாணவர்கள் 61 பேருக்கு காலிப்பர்கள், விபத்தில் கால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

News August 26, 2025

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு

image

நிதி நிறுவனத்தில் ₹40,000 கடன் வாங்கிய சுமித்ரா, 8 மாத தவணைகள் செலுத்திய பிறகு மீதி தொகையை செலுத்தவில்லை. இதனால் கடன் பெற்றுத் தந்த ரூபினா மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் சுமித்ராவிடம் பணத்தை திரும்ப கேட்டனர். மனமுடைந்த சுமித்ரா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில், நேற்று இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News August 26, 2025

திருவள்ளூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகமும், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!