Tamilnadu

News August 25, 2025

செங்கல்பட்டு: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “வாகனம் ஓட்டும் போதும் பயணம் செய்யும் போதும் சீட் பெல்ட் கட்டுவது உயிரைக் காப்பாற்றும்” என அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பை முன்னிட்டு எப்போதும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News August 25, 2025

16 பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம்

image

தமிழகத்தில் உள்ள நகராட்சி & பேரூராட்சி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் விரிவாக்கம் செய்கிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை,மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலைஉணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News August 25, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆக.25) இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 25, 2025

தூத்துக்குடி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

image

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<> #இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 25, 2025

நாமக்கல்: வங்கியில் கிளார்க் வேலை.. நாளை கடைசி!

image

நீங்களும் எஸ்பிஐ-யில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். நாளை (ஆக.26) கடைசி தேதியாகும். (SHARE பண்ணுங்க)

News August 25, 2025

மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

தேனி: ரூ.64,000 சம்பளம், வங்கி வேலை! நாளை கடைசி

image

தேனி மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி. உதவும் மனம் கொண்ட தேனி மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

தஞ்சையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று(ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 432 புகார் மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!