India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனியார் கல்லூரி பின்புறத்தில் வருகின்ற ஆகஸ்ட்.30ம் தேதி, 1ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை விழுப்புரம் மாவட்ட துப்பாக்கி பயிற்சி விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி செப்.,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 25/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 25.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; சேலம் டவுன் D. பழனியம்மாள் (94981-67715), அன்னதானப்பட்டி பழனி (94981-84845), கொண்டலாம்பட்டி சின்ன தங்கம் (94981-68290), அம்மாபேட்டை நந்தகுமார் (94981-02546) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
கோவை, மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மக்களே SHARE பண்ணுங்க!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி, முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரம் பொருளாதாரம் மேம்படும் வகையில், அரசு பல்வேறு நல உதவிகள் கல்வி உதவித்தொகை சுய தொழில் துவங்க கடன் உதவிகள் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் துப்புரவு பணியாளர்களை மலக்குழியில் இறங்கி பணி செய்ய யாரேனும் வற்புறுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
Sorry, no posts matched your criteria.