Tamilnadu

News March 16, 2024

புதுக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

image

புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் இலுப்பூர் நகரம் சார்பில் காங்கிரஸ் திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி பாரதிய ஜனதா சார்பாக நேற்று இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.இதில் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் இலுப்பூர் நகர பொறுப்பாளர் சசிகுமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சபரிநாதன், கிளை தலைவர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

News March 16, 2024

சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை

image

சென்னை-கோவை இடையே புதிய இரண்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6:30 மணிக்கும் விமான சேவை வரும் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (மார்ச்.16) அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

News March 16, 2024

தமிழக முதல்வருக்கு மனு அனுப்பிய பொதுச்செயலாளர்

image

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 16) மனு அனுப்பியுள்ளார்.அதில் 2016ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!