Tamilnadu

News August 16, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News August 16, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 16.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 16, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (16.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*

News August 16, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 16, 2025

எம்எல்ஏ-வை சந்தித்து வாழ்த்து பெற்ற பேரூராட்சி தலைவர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, அரசுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகச் சிறந்த பேரூராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டது. சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்திரமேரூர் பேரூராட்சித் தலைவர் சசிகுமார் மற்றும் செயல் அலுவலரிடம் இந்த விருதை வழங்கினார். விருதைப் பெற்ற சசிகுமார், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றார்.

News August 16, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

தென்காசியில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஊர்வலம்

image

தென்காசி பாரதிய ஜனதா கட்சி சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராதை கிருஷ்ணர் முருகன் சிவன் கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட சின்னஞ்சிறு மழலை குழந்தைகள் பெற்றோர்களுடன் ரதவீதிகளில் ஊர்வலமாக சென்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.

News August 16, 2025

கடலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.16) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட 
 காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!