India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சியில் செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை கூத்தாநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் எம்.சுதர்சன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பை கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு சுகாதார முறையில் அன்றாடம் வரும் மீன் இறைச்சிகளை நல்ல முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தங்கராஜ் தலைமை தாங்கினார்.இதில் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கலெக்டர் விளக்கி பேசினார்.இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாவட்டம் வருவாய் அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தசூழலில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோர் சீட் கேட்டு மேலிடத்திடம் காய் நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் புதுச்சேரி போலீசாருடன் புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவ படையினருடன் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.
புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழிகாட்டு நெறிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் மூலம் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூருக்கு வரும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்து, வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.