Tamilnadu

News August 25, 2025

விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News August 25, 2025

திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

image

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

News August 25, 2025

தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. SHARE பண்ணுங்க.

News August 25, 2025

வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

image

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

News August 25, 2025

புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்…

image

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17510081>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>

News August 25, 2025

குமரியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

குமரியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <>இங்கு கிளிக்<<>> செய்து முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள் (அ) 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News August 25, 2025

ஈரோட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு!

image

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் நாளை முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது என்பதால் விண்ணப்பதாரர்கள் மோசடி செய்யும் ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

image

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!