India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனம்குப்பம் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூன்று இளைஞர்கள் சாலையில் இருந்த பனை மரத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதை கண்ட பகுதி மக்கள் உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் வரவைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரகுபதி, ரவிச்சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், விழா ஏற்பாட்டாளர்கள் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் ரங்கராஜ் 65. அவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளிப் பொருட்களும், பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், 4 சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து பணம்,, வெள்ளி பொருட்களையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருடிய 4 சிறுவர்களை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மீறினால் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர், சங்கீதா என்பவர் களிமண் மற்றும் விதைகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.விநாயகரின் கண் மற்றும் மூக்கு பகுதிகளில் மஞ்சாடி கொட்டை எனும் விதையையும், பிற இடங்களில் நவதானியங்களையும் சேர்த்து உருவங்களை உருவாக்கி வருகிறார்.
சேலம் மாநகராட்சியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.758 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோளிங்கர் நகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ்கண்டை மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளை (ஆக.26) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஆக.24) இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியே வேகமாக வந்த கார் மோதியதில் சதீஷ்குமார் மற்றும் சுனில் என்ற இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் (ம) பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 9.9.2025 மற்றும் 10.9.2025 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழி கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.