India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தசாமி(வயது 75). கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்ததார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா்,ஆக.20ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டு வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளாா். குடும்பத்தினா் முதியவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று உயிரழந்தார். மோரணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிராம்பட்டினம், சாலியமங்கலம், அய்யம்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை, மெலட்டூர், பூண்டி, சாலியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி – மாலை 3 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை வீரக்குடி, தஞ்சை துணை மின் நிலையங்களிலும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த அனந்தராமன் என்பவரது நர்சரி கார்டனில் நிறுத்தியிருந்த பிக்கப் வேன், இரும்பு தளவாட சாமான்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சிலர் ஆக.21 அன்று திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட சிரஞ்சீவி, ஸ்டாலின், ராஜ்குமார் ஆகியோரை நேற்று (ஆக.24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2011 ஆம் ஆண்டு கொச்சியில் இருந்து பெங்களூருக்கு விளைநிலங்கள் வழியாக ஐடிபிஎல் நிறுவனம் விவசாயிகளின் போராட்டங்களை மீறி எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கு எரி காற்று குழாய்களை அமைக்க அளவீடு செய்ய இன்று இந்த நிறுவன அதிகாரிகள் இங்கு வந்தனர். இங்குள்ள விவசாயிகள் இவர்களை சிறைப்பிடித்து வைத்ததால் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தனர்.
புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தேசிய ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுவையில் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மூலம் வரும் வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்க (அ) ஏதேனும் சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930 & 0413–2276144 / 9489205246 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.