Tamilnadu

News March 19, 2024

வேலூர் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு (மார்ச் 18) ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

News March 19, 2024

விழுப்புரத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

image

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், டிஎஸ்பி ரவாத் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெகதீஷ் மற்றும் 89 போலீஸாா் கொண்ட மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை குழுவினா் நேற்று (மார்ச் 18) விழுப்புரத்துக்கு வந்தனா். இவா்கள், காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News March 19, 2024

வீட்டிலேயே தபால் ஓட்டு போடலாம் – கலெக்டர்

image

வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

மயிலாடுதுறையில் பாமக போட்டி

image

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

கடலூர்,சிதம்பரத்தில் பாமக போட்டி

image

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர்,சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.கடலூரில் வழக்கறிஞர் பாலு,சிதம்பரத்தில் சங்கர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்ப்பு

News March 19, 2024

வேட்பாளர் வங்கி கணக்கு கண்காணிக்க உத்தரவு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்திற்கு அதிகமான பண பரிமாற்றங்கள் நடந்திருந்தால் அது குறித்த தகவல்களை வங்கிகள் தெரிந்திருக்க வேண்டும். ஒரே வங்கி கணக்கு மூலம் பல வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருந்தால் அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

காங்கிரஸ் நெல்லை வேட்பாளராக மீண்டும் ராமசுப்பு?

image

பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் திருநெல்வேலி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் இன்று எதிர்பார்ப்பில் உள்ளனர் எனினும் முன்னாள் எம்பி ராமசுப்புவுக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

News March 19, 2024

ஸ்ரீபெரும்புதூரில் பாமக போட்டி?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாமகவுக்கு போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!