India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் ‘வருகிற 23.03.24 தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெறும் இடத்தினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி .கே. கலைவாணன் எம்எம்ஏ, . தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ,எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.தற்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார்.
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் லக்க்ஷயா எனும் தேசிய அளவிலான பல்சுவை போட்டிகள் கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், தமிழகம் முழுவதிலிருந்தும் 25 கல்லூரிகளை சேர்ந்த 325 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் வென்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மென் பொறியாளர் பாலாஜி சங்கர் பரிசுகளை வழங்கினார்,
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் அலுவலர் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் விவரங்களை தெரிவிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கெஜஜல்நாயக்கன் பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உறையாற்ற உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து சேலம் எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பாஸ் அலி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது அக்காவை அடித்து காயப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாஸ் அலிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான், கணக்காளர் ஷெரிப்பிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
உதகை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நான்காவது நாளான நேற்று (மார்ச் 18) நீலகிரி மாவட்ட ஒக்கிலிகர் இனத்தார் சார்பில் புலி வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. இதில் கேரளாவின் செண்டை மேளம், கர்நாடகாவின் கிராமிய நடனம், தமிழ்நாட்டின் கோலாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sorry, no posts matched your criteria.