Tamilnadu

News March 18, 2024

மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

image

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

News March 18, 2024

நாமக்கலில் மஞ்சள் பை விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மணாகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில் நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

News March 18, 2024

யானைகள் நடமாட்டம்:  வனத்துறை அறிவிப்பு

image

கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர். 

News March 18, 2024

பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

image

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.

News March 18, 2024

குமரி: குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு

image

குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 18, 2024

தவறான தகவல் பரப்பினால்: கலெக்டர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

News March 18, 2024

பரத நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

image

மதுரை தெற்கு மண்டலத்திற்குபட்ட சுடலை முத்து பிள்ளை தெரு ஶ்ரீ நாகர்சாமி கோவிலில் இன்று 54ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாரத நாட்டியமாடி அசத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா நாட்டியமாடிய மாணவிகளை பாராட்டினார்.

News March 17, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 17ம் தேதி இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2024

தர்மபுரி அருகே சோகம்

image

பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!