Tamilnadu

News March 18, 2024

திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

image

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு  வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News March 18, 2024

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

image

பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் 6 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 18, 2024

நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ம. செல்வராசு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரியா?

image

கடலூர் தொகுதியில் தற்போது திமுக எம்பியாக ரமேஷ் உள்ளார்.இந்நிலையில்
வருகின்ற லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாஜி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் கே.எஸ் அழகிரிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 18, 2024

திருச்சி ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம் மற்றும் தொழில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

News March 18, 2024

ஆற்காடு நகராட்சிக்கு ஆயிரம் பூவரசு மர விதைகள்

image

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.

News March 18, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு பெட்டி

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த புகார் மனுக்களை போட்டு சென்றனர்.

News March 18, 2024

வேட்பு மனுவை முதல் ஆளாக பெற்றுச் சென்ற நாம் தமிழர் 

image

பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 20-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா இன்று முதன் முதலாக வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வாங்கி சென்றார்.

News March 18, 2024

சென்னையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் 974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!