India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி ஆர் வி. எஸ் வேளாண்மை கல்லூரி சார்பில் நடைபெற்றது. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் பள்ளியை வந்தடைந்தது.
காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரர்மழலையர் தொடக்கப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி பரிமளா அறிவழகன் செய்திருந்தார்.
திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 2வது தெருவில் வசித்து வருபவர் பெருமாள்(58) ஆட்டோ ஓட்டுனர். இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இன்று வீட்டில் சோதனை செய்த போது ஹன்ஸ் 290, கூல் லிப், வி1 180 பாக்கு, உள்ளிட்ட வகைகளை பறிமுதல் செய்து இதை வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளதால் விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தையும் 04286 233079 எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் அலுவலர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சி தலைமை அறிவித்த நிலையில், புதுச்சேரிக்கு வருகை தந்த நமச்சிவாயத்தை பாஜக நிர்வாகிகள் நேற்று இரவு புதுச்சேரி எல்லைப் பகுதியில் மலர்கள் தூவி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர். தொடந்து பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
குமரி ஆரல்வாய் மொழியைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் தினகரனிடம், கோவை மயிலேறிபாளையம் சுப்ரமணி என்பவர் தொடர்பு கொண்டு ரூ.1.25 லட்சம் கட்டினால் 3 ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.1.13 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.47 லட்சம் பெற்ற நிலையில் மீதம் தரவில்லை. இப்புகாரின் பேரில் போலீசார் சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு மாதங்களாக மாலை நேர சிற்றுண்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஶ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது. தி.து.பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.