Tamilnadu

News March 23, 2024

தேனி அருகே விபத்து

image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (19). இவர் நேற்று தனது நண்பர் தினேஷ் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வைகை அணையை சுற்றி பார்க்க வந்தனர். இருவரும் டூவீலரில் வீடு திரும்பும் போது ஜம்புலிபுத்தூர் பெரிய பாலத்தில் எதிரில் வந்த லோடுவேன் மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

திருப்பூர்: லாரி மோதி தொழிலாளி பலி

image

காங்கேயம் தாலுகா பரஞ்சேரி வழி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன், கூலித் தொழிலாளி. இவர் காங்கேயம் ஈரோடு சாலையில் முள்ளிபுரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மூணாறை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டிவந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

News March 23, 2024

தேர்தல் அலுவர்களுக்கு நாளை பயிற்சி 

image

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 2751 வாக்குச்சாவடிகளில் 13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்டங்களாக அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக உதவித்தேர்தல் அலுவலர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால், அனைவரும் தவறாமல் பங்கேற்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

News March 23, 2024

திருவண்ணாமலை அருகே சோகம்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, விளாப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்களுக்கு  திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா நேற்று மாலை  வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சிதம்பரம் தொகுதி

image

சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுவதால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக வின் அதிதீவிர விசுவாசியாக திகழ்ந்த கார்த்தியாயினி ஜெயலலிதா மறைந்த பின் ஒரு சில மாதங்களிலேயே பாஜகவில் இணைந்தார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர்.

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 23, 2024

கடலூர்: 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது ‘போக்சோ’

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு கடலூர்,திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய்க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து கேசவனை தேடி வருகின்றனர்

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

கரூர் மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?

error: Content is protected !!