India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் முதல் கட்ட பயிற்சி மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது 17 வயது மகள் பல்லவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த பல்லவியின் பெற்றோர் இன்று அம்பலூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரு கருணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
செய்யாறு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னராசு என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், மாணவி கர்ப்பமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராசுவை தேடி வருகின்றனர். இவர் 2 குழந்தைக்கு தந்தை என்பதும் மாணவிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்ய பிரணவ் என்ற பிளஸ் டூ மாணவர் நேற்று முன்தினம் வேதிப்பொருள்களை பயன்படுத்திய போது வெடி விபத்து ஏற்ப்பட்டது. இதில் அந்த மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்தது போலீசார் விசாரிக்கின்றனர்.
குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தேர்தலை புறக்கணிப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 நபர்களை கைது செய்யப்பட்டும், 3,663 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.2,34,552/- என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.