India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சாலை குமாரசுவாமி திருக்கோவில், திருமணத் தடை உள்ளவர்கள் தரிசிக்க சிறந்த முருகன் திருத்தலமாகும். இங்கு மூலவர் ஆறுமுகத்துடன், பன்னிரு கைகளுடன் மயில்மேல் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். திருச்செந்தூர் கோவிலுக்கு இணையாக இங்கு பூஜைகள், விழாக்கள் அனைத்தும் அந்த ஸ்தல பாணியில் நடைபெறும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வருவது இக்கோயிலின் சிறப்பு* மறக்காம ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️திருப்பத்தூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும்SHARE பண்ணுங்க
காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
தென்காசி மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <
வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஹர்ஷிதாவின் குணநலனில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதில் மனமுடைந்த ஹர்ஷிதா, தர்ஷனின் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தபோது, திடீரென 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாரையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகே இருந்த பூக்கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணன் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
வேளாங்கண்ணி சர்ச் திருவிழா ஆக.29 முதல் செப்.8 வரை நடைபெறவுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆக.,28 முதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவினை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு பயண கட்டணம் உள்ளிட்ட விபரங்களுக்கு 63827 86659 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்து துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
காங்கேயம் களிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் இன்று காலை அவரது மகள் வித்யா (28) என்பவருடன் டீ குடிக்க ரவுண்டானா அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது மஞ்சள் பை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்த செல்வராஜ், பைக்குள் 500 ரூபாய் கட்டுகள் 3 என ரூ. 1.50 லட்சம் இருந்துள்ளது. பின்னர் பணத்தை எடுத்து சென்ற செல்வராஜ், காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் ஒப்படைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.