India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் இன்று மாலை 5.30 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
செங்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்று உள்ளது இந்த வாகனங்கள் மூலம் தினமும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.. இந்நிலையில், ரோந்து வாகனம் அடிக்கடி பழுதாகி தள்ளும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவல்துறையினர் ரோந்து பணிகள் சரிவர செய்ய முடிவதில்லை என புகார் எழுந்துள்ளது.
வண்ணாங்கோவிலில் இன்று 24-3-2024 அன்று நாடாளுமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் குறித்து ஆட்சியர் ஆட்சித்தலைவர் பூங்கொடி கலந்துரையாடினார். அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, வேடசந்தூர் வட்டாட்சியர் விஜயலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
திண்டுக்கலில் இன்று மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையம், மேலும் மக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள், திரையரங்கம், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பலகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. பல்வேறு பிரிவு அலுவலர்களின் பணி விவரங்கள் வீடியோ மூலம் விளக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயிற்சி முகாமை பார்வையிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பழனி சவாரிக்கு மலைப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர், கிராம மக்கள் போராடிய தீயை அனைத்து நிலையில் இன்று புகை மூட்டமாக காணப்பட்டது. மலையிலிருந்து வெளியேறிய புகை வின்னி முட்டும் அளவிற்கு சென்றது. காட்டு தீயால் ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமாகின. வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி யிடம் மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசாவும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாளை (மார்ச். 25) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பாலக்கோடு ஜோதி அள்ளியை சேர்ந்த விவசாயி ராஜீ 55. இவரது மனைவி சாலம்மாள் . குடிப்பழக்கம் உடைய ராஜீக்கு அல்சர் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மனைவி குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். மனமுடைந்த ராஜி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.