India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் குளிர்ச்சியான தண்ணீரை பெருவதில் அதிக ஆர்வம் காட்டுவர் இதற்காக நாமக்கல்லில் மண் பானை விற்பனை தொடங்கியுள்ளது ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை திருச்சியில் இருந்து கொண்டு வந்து நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரி நாகராஜன் கூறினார்.
தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.
ஆண்டிப்ட்டி பகுதியில் 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பறக்கும் படையினர் முறையாக வாகன சோதனையில் ஈடுபடுகின்றனரா? என்று குறித்து இன்று ஆட்சியர் சஜிவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்று கிளிநொச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.
குமரி மாவட்டம் பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் நேற்று இரவு இளஞ்சிறை பகுதியில் பைக்கில் சென்ற போது எதிரே வந்த சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். வினோத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை பறிமுதல் செய்த பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் நிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் அளித்து விசாரணை மேற்கொண்டதில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வீரவேல் மற்றும் கருணாகரனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உதகை-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள நொண்டிமேடு பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் (மார்ச் 22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இந்த மறியல் நடந்ததாக தெரிவித்தனர். உதகை பி1 நிலைய போலீசார் பொதுமக்களை சமாதானம் படுத்தி அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஒட்டந்னதல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை ஒட்டி இன்று (மார்ச் 23) பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
Sorry, no posts matched your criteria.