India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி: முட்டம் கடற்கரையில் இன்று அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, , முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் இன்று (23.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தெரியவந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட கூடிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புருஸ் என்பவர் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 23) தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை தலைமை அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய தொண்டர்கள் சுழன்று வேலை பார்ப்பார்கள் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைதொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக நெல்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா இன்று (மார்ச் 23) நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்தார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம், கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் உள்ள மாவட்ட, சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயில், உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். இதில் ரூ.41,60,182 பணம், 203 கிராம் தங்கம் மற்றும் 2,732 கிராம் வெள்ளி இருந்தது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சேலம் தொகுதியில் விக்னேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் சேலம் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர்களான வெங்கடாசலம், இளங்கோவன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரான செல்வராஜ் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அசோகன், அவர்கள் அறிமுக கூட்டம் அரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. உடன் அம்மா பேரவை தலைவர், எஸ்.ஆர் வெற்றிவேல் தருமபுரி நகர மன்ற தலைவர், பூக்கடை ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வரக்கூடிய எலுமிச்சம்பழம் கடந்த சில மாதங்களாக வராத காரணத்தினால் ஆந்திராவில் இருந்து மட்டுமே எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக எலுமிச்சையின் விலை 8 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சேலம் மாவட்டத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை 3, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.