India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். நாளை (மார்ச் 24) தனது முதல் பிரச்சாரத்தை கனிமொழி எம்பி தொடங்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், கலைஞர் அரங்கத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலூர் புனித வளனார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது இந்த ஆண்டு விழாவிற்கு அருட்தந்தை முனைவர் சேவியர் அருள்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஆண்டு விழாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 23) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் தலைமையில் இன்று அனைத்து கட்சி மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு திருக்குர் ஆன் அன்பளிப்பாக வழங்கினர். இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உதகை சட்டமன்ற தொகுதி பாஜக வாக்கு சாவடி குழு மற்றும் தேர்தல் பணி குழு கூட்டம் இன்று (23 தேதி ) நடைபெற்றது. உதகை நகர பாஜக தலைவர் சி பிரவீன் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், அருண், உதகை நகர பொது செயலாளர்கள் சுரேஷ்குமார், ரித்து கார்த்திக், துணை தலைவர் ஹரி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் சாமாந்தான்பேட்டையில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நாகப்பட்டினம்(தனி) மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், மற்றும் நிர்வாகிகள் பாண்டியன், முகில் ஆகிய 6 பேரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பௌர்ணமி (24.03.2024), பங்குனி உத்திரம் (25.03.2024), பண்ணாரி குண்டம் (25.03.2024) மற்றும் வார இறுதி நாட்களான (23.03.2024-24.03.2024) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி செல்ல 30, திருவண்ணாமலை செல்ல 25, பண்ணாரி கோவிலுக்கு மற்றும் வெளியூர்களுக்கு செல்ல 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், இன்று தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் அரசுப்பள்ளி, லயன்ஸ்கிளப், நேருயுவகேந்திரா அறிவியல் இயக்கம் போன்றவைகள் இணைந்து நெகிழியை தவிர்ப்போம், மஞ்சள் பையை மீண்டும் பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.