India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சி சிறுகனூரில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு , திமுக என்றென்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் இயக்கம் என்றும் பெரம்பலூர் தொகுதியின் வெற்றியை முதல்வருக்கு சமர்பிப்பேன் என உறுதியளித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திருச்சி தேர்தல் பரப்புரை பயணத்தின் போது புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, நாஜிம், சம்பத், எம்எல்ஏக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெருங்குளம் அருகே நதிப்பாலம் விலக்கில்
இரவில் அவ்வழியே செல்வோரை ஒரு கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர். இது தொடர்பாக விசாரணையில் பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கேதீஸ்வரன், முகிலன், அஜய் & 3 சிறுவர் உட்பட 7 பேரை உச்சிப்புளி போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரையை சேர்ந்த ராமச்சந்திரனை (38) கைது செய்தனர். பின் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை இன்று சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வருடத்தில் கோவையில் 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர் என்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் உடல்நலக் குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.
கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் இன்று (மார்ச்.22) மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் துணை ஆணையாளர் செல்வ சுரபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஏடிஎம் நிரப்ப சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல் செய்தனர்.
தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிபட்டியில் ரூபாய் 15- கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு இலவச மையத்தை கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுக்கு இங்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
தி.மலை பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுபோல திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் அதிகரிக்கும். எண்ணிக்கையும் இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பவுர்ணமி மற்றும் உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.