Tamilnadu

News March 22, 2024

ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2024

சிறுமி திருமணம் போக்சோவில் கைது

image

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. கட்டடத் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து அச்சிறுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(மார்ச்.21) கைது செய்தனர்.

News March 22, 2024

பழனியில் நாளை முதல் 4 நாட்கள் நிறுத்தம்

image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி மலைக் கோவிலில் நாளை(மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பக்தர்கள் தங்கரதம் இழுப்பதற்கும் அனுமதி கிடையாது. இன்று வழக்கம் போல் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். 

News March 22, 2024

ஏப்ரல் 1ஆம் தேதி இபிஎஸ் வேலூர் வருகை

image

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News March 22, 2024

கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

image

கரூர், கடவூர் சீலமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியசாமி. இவர் கடவூரில் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரியசாமி நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ஒருவர் கொலை 

image

கானத்தூர் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன்(42) யோகா மாஸ்டர். இவரை கடந்த 13ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (38), கஸ்துாரியை (35) விசாரித்ததில் இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று(மார்ச்.21) கைது செய்துள்ளனர். 

News March 22, 2024

81 பேர் மீது வழக்குப் பதிவு

image

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் செய்யாறு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி.மு.க வினர் 41 பேர்.அ.தி.மு.க 40 என மொத்தம் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2024

நீலகிரி தொகுதியில் இதுவரை மனுதாக்கல் இல்லை

image

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.

News March 22, 2024

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் பகுதி ரத்து

image

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர் வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 23, 24) ஆறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 22, 2024

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

error: Content is protected !!