Tamilnadu

News March 22, 2024

பத்திரிகையாளர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு

image

மக்களவை தேர்தலில் அலுவலகப் பணி காரணமாக அரசு அங்கீகார அட்டை மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலை உள்ளது. இவர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும்.

News March 22, 2024

கடலூரில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியா?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 22, 2024

தேர்தல்: தா.மா.கா வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழக மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதி தா.மா.க வேட்பாளராக விஜயகுமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தா.மா.கா வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 தொகுதிகளுக்கு தா.மா.கா சார்பில் ஜி.கே.வாசன் தற்போது வேட்பாளர்களை அறிவித்தார்.

News March 22, 2024

ஸ்ரீபெரும்புதூர் த.மா.கா வேட்பாளர் அறிவிப்பு

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி(த.மா.கா) வேட்பாளராக வி.என்.வேணுகோபால் இன்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

News March 22, 2024

நெல்லையில் வைரலாகும் தேர்தல் அழைப்பிதழ்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற காகிதத்தின் புகைப்படம் நெல்லையில் வைரல் ஆகி வருகின்றது. அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நமது மாவட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

News March 22, 2024

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆய்வு

image

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வருகிற 25ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக 40 ஏக்கரில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் ஆகியோர் நேற்று (மார்ச் 21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 22, 2024

திருநெல்வேலியில் எம்எல்ஏ மகன் போட்டி?

image

நெல்லை தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியான நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங். வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மகன் அசோக் ரூபி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உத்தேச பட்டியலில் பீட்டர் அல்போன்ஸ் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

நெல்லை மாவட்டத்தில் 65 மிமீ மழை பதிவு

image

நெல்லை மாவட்ட வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்று (மார்ச் 22) அதிகாலை பல இடங்களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 65.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அருகே உள்ள நாலு முக்கு 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரியில் 9.60 mm, சேர்வலாறு அணை எட்டு மில்லி மீட்டர் மழை பெய்தது.

News March 22, 2024

பாஜக வேட்பாளருக்கு மாவட்ட தலைவர் நேரில் வாழ்த்து

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை நேற்று (மார்ச் 21) இரவில் அவரது இல்லத்தில் வைத்து பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் தொண்டர்களை சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

News March 22, 2024

தஞ்சாவூரில் நாளை முதல்வர் பிரச்சாரம்!

image

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கவுள்ளார். இதை தொடர்ந்து நாளை(மார்ச் 23) தஞ்சாவூர், நாகை என 20 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறுத்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மலைக்கோட்டையில் தொடங்குகிறேன்; டெல்லி செங்கோட்டையை I.N.D.I.A கூட்டணி பிடிப்பதில் இப்பிரச்சாரம் நிறைவுற வேண்டும் என முதல்வர் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!