India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட விவேகானந்தர் காலனியில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சீரமைக்க கோரி ஏற்கனவே மனு அளித்தும் சாலை சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை செங்கமலநாச்சியார்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குமரி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சூரிய ரேஸ்மி. இவர், நேற்று பணியில் இருந்தபோது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த வியாபாரி அருள்ராஜன்(45) என்பவர் மதுபோதையில் வந்து, சூரிய ரேஸ்மியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜனை கைது செய்தனர்.
ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை
தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாம்குளம் கண்மாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.அவர் ஆவல் நத்தத்தை சேர்ந்த குருசாமி என்பதும் கண்மாய்பாலத்தில் அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
ஆண்டிபட்டி வேளாங்கன்னி மாதா பள்ளி, போடி ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சம்மந்தப்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்ற 177 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. கட்டடத் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து அச்சிறுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(மார்ச்.21) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.