Tamilnadu

News March 22, 2024

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

News March 22, 2024

பெரம்பலூர்: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

image

2024 மக்களவை தேர்தலில், I.N.D.I.A கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் பயணம் மேற்கொண்ட அருணுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

News March 22, 2024

நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

image

சென்னையில் இன்று(மார்ச் 22) இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காலை முதலே வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருகிறது.

News March 22, 2024

தருமபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்து இன்று(மார்ச் 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு மனு கொடுத்தும், இதுவரை தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவிக்கும் இம்மக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

News March 22, 2024

சேலம்: உடனே ஒப்படைக்க உத்தரவு!

image

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, துப்பாக்கி உரிமதாரர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

செய்தியாளர்களுக்கு தபால் வாக்கு-ஆட்சியர்

image

மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அலுவலகப் பணிகள் காரணமாக அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள்
அஞ்சல் வாயிலாக தங்களது வாக்குகளை செலுத்தலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். படிவம் 12Dயை உரிய முறையில் பூர்த்தி செய்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் சமர்ப்பிக்கலாம்.

News March 22, 2024

கோவில் திருவிழா: டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு 3 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளலூர் நாடு அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் உள்ளூர்டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 22, 2024

திருச்சியில் இன்று முதல்வர் பிரச்சாரம்

image

திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2024

தூத்துக்குடியில் தொடரும் மழை

image

தமிழகத்தில் இன்று (மார்ச்.22) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொரடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

அண்ணாமலையை சாடிய டி.ஆர்.பி ராஜா

image

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொறுப்பாளர் டி.ஆர்.பி ராஜா, திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போடுவதாக சொல்லியுள்ளார்கள். அதுவும் மட்டன் பிரியாணி சுவையான ஆட்டு பிரியாணி என்றார். 

error: Content is protected !!