Tamilnadu

News March 20, 2024

தருமபுரி: திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக அ.மணி களமிறங்குவதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து, தருமபுரி திமுக தலைமை அலுவலகத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள், மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News March 20, 2024

தொகுதி ஒதுக்கீடு: எஸ்டிபிஐ வேட்பாளர் முடிவு

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டதும் நெல்லை எஸ்டிபிஐ கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் தொகுதியில் கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 20) மாலை வெளியாகும் என கூறப்படுகிறது

News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

News March 20, 2024

உரிமம் பெற்ற 68 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் அம்மாபேட்டையை சுற்றி உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த 68 பேர் அம்மாபேட்டை காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

News March 20, 2024

திருவள்ளூர்: லாரி மோதி +2 மாணவி உயிரிழப்பு

image

புழல் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி, அவரது மகள் ஜெயபாரதி +2 மாணவி. ஜெயபாரதியுடன் தயாநிதி பைக்கில் ஆத்தூர் மேம்பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஜெயபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தயாநிதியின் 2 கால்கள் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் பாரத் சர்மாவை போலீசார் கைதுசெய்தனர்.

News March 20, 2024

விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், மத்திய சென்னை, திருச்சி மக்களவை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்.

News March 20, 2024

251 விதிமுறை மீறல்கள் வழக்குகள் பதிவு

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேர் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம், குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி ஆறு இடங்களில் காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்டன.

News March 20, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக சார்பில் 4 எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நீலகிரி மக்களவை வேட்பாளர் ஆ.ராசா அவிநாசி சட்டமன்ற தொகுதியிலும், பொள்ளாச்சி மக்களவை வேட்பாளர் ஈஸ்வரசாமி உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளிலும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் தொகுதியிலும், ஈரோடு மக்களவை வேட்பாளர் பிரகாஷ் தாராபுரம், காங்கேயம் தொகுதிகளிலும் களமிறங்குகின்றனர்.

News March 20, 2024

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அறிவிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி முறையில் பயின்று டிசம்பர் 2023 தேர்வில் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான https:/coe.annamalai university .ac.in /dde-results.php என்ற இணைய வழி முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக அறிவிப்பு எடுத்துள்ளது

News March 20, 2024

ஊடக சான்றளிப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி பெற வேண்டிய ஒற்றைச் சாளர முறை (SINGLE WINDOW SYSTEM ) அறையை இன்று (20.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா பார்வையிட்டார். இதேபோல் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!