Tamilnadu

News March 23, 2024

திருச்சி:மேம்பால கட்டுமான பணி: போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி தில்லைநகர் பகுதியில் இருந்து சத்திர பேருந்து நிலையம் செல்லும் வழியில் மாரிஸ் தியேட்டர் அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த பிரதான சாலை வழியாக நேற்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாறாக கரூர் பைபாஸ் சாலை மற்றும் ராமகிருஷ்ண பாலம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

News March 23, 2024

வெயிலின் தாக்கத்தால் நிழற்குடையில் பதுங்கும் பயணிகள்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.23) வெயிலின் தாக்கத்தால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையின் கீழ் தஞ்சம் அடைகின்றனர். மேலும் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடைகள் போதுமானாதாக இல்லை என பயணிகளிடையே குற்றசாட்டுகள்  எழுந்துள்ளது.

News March 23, 2024

கிருஷ்ணகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, கே.அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே போலீசார் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி ஆலயத்தின் 95 ஆம் ஆண்டு உற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

செங்கல்பட்டு அருகே வெடித்தது போராட்டம்

image

மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலு நேற்று தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பாலுவின் காரில் இருந்த “Fastag” ஸ்கேன் ஆகாததால் சுங்கசாவடி ஊழியர், பாலு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீடிரென சுங்கசாவடி ஊழியர்கள் பாலுவை தாக்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News March 23, 2024

மதுரை: சைவ பிரியர்களுக்கு இது வரப்பிரசாதம்

image

சைவ பிரியர்களுக்கு விட்டமின் ஏ, டி பற்றாக்குறையை நீக்க குறுந்தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பால் உதவுகிறது என மதுரையில் நேற்று நடந்த பயிலரங்கில் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார். அப்போது, “விட்டமின் பி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் அதிகமுள்ள இந்த பாலில் அலர்ஜியை ஏற்படுத்தும் குளூட்டான் மற்றும் லாக்டோஸ், கொழுப்புச்சத்து இல்லாததால் -இது விலங்குகளிடமிருந்து பெறும் பாலை விட சிறந்தது” என்றார்.

News March 23, 2024

தேனி அருகே டூவீலர் மோதி விபத்து

image

அணைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி. எலக்ட்ரீசியனான இவர் தனது டூவீலரில் கம்பம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயங்களுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 23, 2024

பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பெஞ்சமின் கிருபாகரன் போட்டியிடுவார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

காவிரி ஆற்றில் குவிந்த முருக பக்தர்கள்

image

பங்குனி உத்திரவிழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி கொடு முடிகாவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று திரண்டனர். படித்துறை, வட்டக்கொம்மனை மற்றும் மணல்மேடு பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் பலர் தீர்த்தம் முத்தரித்தனர். மேளதாளம் அரோகரா முழங்க கோஷத்துடன் மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாளை தரிசனம் செய்து, பாதயாத்திரையாக பழநி மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.

News March 23, 2024

நெல்லை அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

error: Content is protected !!