India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
குமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நேற்று(மார்ச் 17) பாளை., சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
மதுரை தெற்கு மண்டலத்திற்குபட்ட சுடலை முத்து பிள்ளை தெரு ஶ்ரீ நாகர்சாமி கோவிலில் இன்று 54ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாரத நாட்டியமாடி அசத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா நாட்டியமாடிய மாணவிகளை பாராட்டினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி தோறும் திங்கட்கிழமை என்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 17ம் தேதி இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் 18.03.2024 நாளை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக தேர்தல் களப்பணியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக துவங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையால் புதிதாக அலைபேசி எண் (8525852636) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுக்க மேற்கண்ட அலைபேசி எண்ணில் புகார் அளிக்க காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.