India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் வழங்கப்பட்ட கார்களை ஒப்படைக்க வேண்டும் என பேரவை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கிய வாகனத்தை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றார்கள்.
இருக்கன்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர் தனது மனைவி மகேஸ்வரியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி நேற்று அதிக மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மகேஸ்வரி புகாரில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டத்தில் நேற்று
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்திருப்பது- சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் நகரில் அரசியல் விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். தனியார் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கடிதம் வேண்டும். இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டும். பிரச்சார அனுமதிக்கு 48 மணி நேரம் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
கடலூர் மாவட்டம் அடுத்து கீழ்ச்செருவாய் கிராமத்தில் இன்று(மார்ச்.18) உயிரிழந்த முருகானந்தம் என்பவரது உடலை வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரம் தாக்கி காயமடைந்த கனகவல்லி, ராஜம்மாள், லலிதா, கௌரி உள்ளிட்டோருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து முகாம்கள் மற்றும் கூட்டங்கள் எதுவும் நடைபெறாது என விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று அறிவித்தார். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை மதியம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலம் வருகை தர இருப்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.