Tamilnadu

News March 19, 2024

கடலூர்: சோதனை சாவடி கட்டிடம் திறந்து வைத்த எஸ்.பி

image

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2024

மக்களுக்கு மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9498101765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

சேலம்: தமிழில் பேசிய பிரதமர் மோடி

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று  பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என்றும், பாரத அன்னை வாழ்க’ எனவும் தமிழில் பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

News March 19, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தேர்வு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அவரவர் இடத்திற்கு சென்று அடிப்படைக் கல்வி அறிவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உடுமலையில் இன்று 109 மையங்களில் 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார். தேர்வில் வாசித்துக் காட்டுதல், எழுதுதல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.

News March 19, 2024

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News March 19, 2024

சிவகங்கை: கேமராவுடன் கூடிய பறக்கும் படை

image

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதிகாரிகள் பணி செய்யும் வாகனத்தில் 5ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 19, 2024

ராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுத்துள்ள செய்தி குறிப்பு: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 7ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 8வது வகுப்பில் சேர்ந்து பயில ஜனவரி 2025 பருவத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு பயனடையலாம்.

News March 19, 2024

சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி!

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

News March 19, 2024

விழுப்புரத்தில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

பெரம்பலூர்: நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, இன்று தலைமை பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் அடுத்த துறைமங்கலத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!