India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே இன்று காலை கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் மணிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தனிப்பட்ட பட்டாதாரர் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடாமல் தரிசாக வைத்துள்ள விவசாய நிலங்களை மீண்டும் விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். தர் நீக்கி சமன் செய்து உழுது பயிர் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு மகுடஞ்சாவடி வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம்.
ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சர்வதேச வணிக உச்சி மாநாட்டு நேற்று தொடங்கியது. இவ்விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யபட உள்ளதால், தொழில் தொடங்க வருவோர் புதுச்சேரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, இன்று (ஆகஸ்ட் 24) அசைவ மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ▶️பிராய்லர் கோழி கிலோ ரூ.200 ▶️நாட்டுக்கோழி கிலோ ரூ. 700 ▶️பண்ணைக் கோழி கிலோ ரூ. 400 என விற்கப்படுகிறது ▶️ஆட்டுக்கறி கிலோ ரூ. 900 முதல் ரூ.1100 ▶️வஞ்சரம் மீன் கிலோ ரூ.550, ▶️நெத்திலி கிலோ ரூ. 400, உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன கமெண்ட் பண்ணுங்க
ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.
செவிலிமெடு, காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் பாலாறு அமைந்துள்ளது. இப்பாலாற்றின் குறுக்கே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் நேற்று பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுகின்றனர். ஜமாபந்தி நடத்தியும் கூட, இப்பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.