Tamilnadu

News March 19, 2024

சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

image

சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கெஜஜல்நாயக்கன் பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உறையாற்ற உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து சேலம் எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

தஞ்சை: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

image

தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News March 19, 2024

பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தை!

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சற்று நேரத்தில் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 19, 2024

திருப்பூரில் பெண் மீது தாக்குதல்

image

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பாஸ் அலி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது அக்காவை அடித்து காயப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாஸ் அலிக்கு 6 மாதம் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

News March 19, 2024

திருவள்ளூர்: போதைப்பொருள்… தீவிர விசாரணை

image

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான், கணக்காளர் ஷெரிப்பிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

உதகை: மாரியம்மன் கோயில் திருவிழா

image

உதகை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நான்காவது நாளான நேற்று (மார்ச் 18) நீலகிரி மாவட்ட ஒக்கிலிகர் இனத்தார் சார்பில் புலி வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. இதில் கேரளாவின் செண்டை மேளம், கர்நாடகாவின் கிராமிய நடனம், தமிழ்நாட்டின் கோலாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News March 19, 2024

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

image

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சா நகரம் பகுதியில் நேற்று இரவு அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அதிமுக சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

News March 19, 2024

தருமபுரி கலெக்டர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று 18 அனைத்து படைக்கல உரிமைதாரர்களும், படைக்கலன்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுபெறும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தங்களது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ஆம்பூரில் ரூ.80,500 பறிமுதல்

image

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச்.18) சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டாடா ஏ.சி வாகனத்தில் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் மோகனிடம் ஒப்படைத்தனர்.

News March 19, 2024

கண்காணிப்பு குழு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒட்டி, 24 மணி நேரமும் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை (MCMC) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!