India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் தலைமையில் இன்று பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் அனுராக் ஜெயினிடமிருந்து விருதினை பெற்றார்.
மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் ஓட்டுக்கு பணம் தருதல், சட்டவிரோத போஸ்டர் ஒட்டுதல் போன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமீறல் புகார்களை, நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்பட, வீடியோ ஆதாரங்களை “சி விஜில்” ( https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil ) என்ற செயலியில் அனுப்பலாம் எல்லாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நாளை தொடங்கி 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளியின்றி வேட்புமனு பெறப்படுகிறது. 23ஆம் தேதி, 24ஆம் தேதி விடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது. இந்நிலையில், வேட்புமனு பெறும் ஏற்பாடுகளை தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.
கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்த கோகிலா (50) என்ற பெண், அப்பள்ளியில் பயிலும் 5 வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரி., அப்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி காலை 9:00க்கு மேல் 9:45 மணிக்குள் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா, ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் வண்டியூர் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.