India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது.
குடுமியான்மலை கல்வெட்டு – 2300 ஆண்டுகள் பழமை
குன்றாண்டார் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
கொடும்பாளூர் மூவர் கோயில் – 1000 ஆண்டுகள்
நார்த்தாமலை, விஜயாலய சோழீஸ்வரம் – 1100 ஆண்டுகள் பழமை
திருமயம் கோட்டை – 400 ஆண்டுகள் பழமை
மலையடிப்பட்டி – 300 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை ஆக.24ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசுகுப்பம், வைத்திக்குப்பம், ஒயிட் டவுன், டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பெரிய மார்க்கெட், பிருந்தாவனம், சாந்தி நகர் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி மின்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலாஜா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (38). கடந்த 2022-ம் ஆண்டு இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விஜயகுமார் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் தர்மராஜ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை விசாரித்த இவ்வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம் தர்மராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு <
வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து குடியாத்தம், காட்பாடி ரோடு, இராஜா கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஆர்.ஜி.டி திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
திண்டிவனம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று நகராட்சி பொறியாளர் சரோஜா முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மருத்துவ பயனாளிகளுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆணைக்கிணங்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அன்னதானம் வழங்கினார். நிகழ்வில் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா, நீரில் கரையும் தன்மை, வர்ணப்பூச்சுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சு உள்ளதா என்பது குறித்து உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், டி.எஸ்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 23) மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த கம்பளி மேடு பகுதியைச் சேர்ந்த இளமதி மற்றும் இந்திரா ஆகியோர் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.