Tamilnadu

News October 23, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் இன்று காலை 9:00 – மாலை 5:00 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர், தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News October 23, 2025

ராமநாதபுரத்தில் ரூ.2.68 கோடி கல்விக்கடன் உதவி

image

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கல்விக்கடன் வழங்கும் விழா முன்னோடி வங்கி சார்பில் நேறறு (அக் 22) நடந்தது. இதில் 218 மாணவ, மாணவியருக்கு ரூ.2.68 கோடிக்கான கல்விக்கடன் உதவி காசோலைகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக்கேயன், உதவி மேலாளர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News October 23, 2025

தேனி மக்களே வேலை வேண்டுமா..இங்க போங்க

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.24) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அதற்கு குறைவான கல்வித்தகுதி உடையவர்கள், டிகிரி, ஐடிஐ, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கலாம்.ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு 98948-89794 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவும்.

News October 23, 2025

பெரம்பலுர்: உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

image

பெரம்பலூர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க (நவம்பர் 15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

விழுப்புரம் மாவட்ட ஏரிகளின் இன்றைய நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில், 61 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. அதே போல், 42 ஏரிகள் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. மேலும் 93 ஏரிகளில் 51 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.

News October 23, 2025

திருவள்ளூரில் இன்று விடுமுறையா?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (அக்.23) கனமழை குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 23, 2025

நாகை: நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

image

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாகை மாவட்ட பட்டியல் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் பண்ணை மகளிர் கிராமபுற இளைஞர்கள் ஆகியோருக்கு நாளை(அக்.24) காலை 10 மணிக்கு நாட்டு கோழிவளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 9677099846 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

தருமபுரி மாணவர்களுக்கு விடுமுறை

image

தருமபுரி அங்கன்வாடி பள்ளிகளுக்கு இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். தொடர்ந்து பொலிந்து வரும் கனமழையால், மற்றும் மாணவர்களின் நலன் கருதி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், பள்ளி நடந்து கொண்டிருக்கும் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது .

News October 23, 2025

ராணிப்பேட்டை: குறைந்த விலையில் வாகனம் வாங்கணுமா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்றத்தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. அக்.30ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நான்கு இரு சக்கர வாகனங்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. விவரங்களுக்கு ஆயுதப்படை தலைமை அலுவலகத்தை அணுகலாம் என்று எஸ் பி அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார்

News October 23, 2025

கிருஷ்ணகிரியில் டன் கணக்கில் குப்பை

image

கிருஷ்ணகிரியில் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், நகரத்தின் 33 வார்டுகளில் பட்டாசு வெடிப்பால் குப்பைகள் அதிகமாக தேங்கின. கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவின்படி, 10 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 131 துாய்மை பணியாளர்கள் இணைந்து, 30 டன் பட்டாசு குப்பையை 2 நாளில் சேகரித்து, நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பினர்.

error: Content is protected !!