India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் முன்னிலையில் 88 துப்பாக்கிகளும், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 25 துப்பாக்கிகளும் என திண்டுக்கல் மாவட்டத்தில் 36 போலீஸ் நிலையத்தில் 978 துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் சுவாமியை வணங்கி அங்குள்ள பொது மக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியசோரகை ஊர் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மத்திய சென்னையில் மருத்துவர் இரா.கார்த்திகேயன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் நேற்று கொளுத்தியது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமியும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, விழுப்புரத்தில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் DR வெ.ரவிச்சந்திரன், காஞ்சிபுரத்தில் வி.செந்தில்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.