Tamilnadu

News March 27, 2024

திருப்பூர்: நாயை அடித்துக்கொன்ற கஞ்சா ஆசாமி

image

திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.

News March 27, 2024

நீலகிரி: பாராட்டை பெற்று வரும் அக்கா தங்கை

image

பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்த சைனுதின், சீனத் தம்பதி. இவர்களுக்கு பாத்திமத்து சுகைனா, ஷப்னா ஜாஸ்மின் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், உடல் வளர்ச்சி குன்றி நடமாட முடியாமலும், கை கால்களை நீட்ட முடியாமலும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் முறையே 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை உதவியாளர் உதவியுடன் எழுதினர். இது பாராட்டை பெற்றுவருகிறது.

News March 27, 2024

குமரி: கொத்தனார் மீது தாக்குதல்

image

குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

News March 27, 2024

கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

image

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 27, 2024

திண்டுக்கல்: பெண் காட்டெருமை பலி

image

கொடைக்கான‌ல் கீழ் பூமி நான்காவது குறுக்கு சாலை அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்ட‌ இரண்டு காட்டெருமைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது,
இதில் சுமார் 5 வயதுள்ள பெண் காட்டெருமை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது. ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு சென்ற‌ வனத்துறையினர் விசார‌ணை மேற்கொண்டு இறந்து கிடந்த காட்டெருமையை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.

News March 27, 2024

திருப்பத்தூர்: அதிமுக நிர்வாகியால் சலசலப்பு

image

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அதிமுகவில் தொண்டராக பணியாற்றி தற்போது திருப்பத்தூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் அமைச்சருக்கு‌ அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2024

தி.மலை: முதியவர் மீது கொடூர தாக்குதல்

image

போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News March 27, 2024

தூத்துக்குடி: மகன்கள் கைது: தாய் தற்கொலை

image

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரை அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் சுதாகர் தங்களது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததற்காக நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களின் தாயார் நிர்மலா நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!